பீன்ஸ் - 100 கிராம்
உருளைக்கிழங்கு - 100 கிராம்.
வெங்காயம் - 2.
தேங்காய் பாதி.
மசாலா பொடி - 2 மே.க.
இஞ்சி - 1 இன்ச்.
பூண்டு - 5 பல்.
பச்சை மிளகாய் - 3.
எண்ணெய் தேவையான அளவு.
உப்பு தேவையான அளவு.
கொத்தமல்லி இலை.
செய்முறை:
- பீன்ஸ், உருளைக்கிழங்கு, வெங்காயம், இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய்,கொத்தமல்லி இலை இவைகளை தனித்தனியே அரிந்து வைக்கவும்.
- பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கை முக்கால் பாகம் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
- தேங்காயை அரைத்து பால் எடுத்து தனியே வைக்கவும்.
- அடுப்பில் ஒரு வானலி வைத்து சூடானதும், சிறிது எண்ணெய் ஊற்றி அரிந்து வைத்துள்ள வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் அரிந்து வைத்துள்ள இஞ்சி மற்றும் பூண்டை போடவும். இதன் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதங்க விடவும்.
- இதனுடன் பச்சை மிளகாயையும் சேர்த்து, இதற்கு தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
- இவை வதங்கியதும் ஆறவைத்து அரைத்துக் கொள்ளவும்.
- அரைத்து வைத்துள்ள கலவையை ஒரு வானலியில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் போட்டு நன்றாக கிளர வேண்டும்.
- அதில் முக்கால் பாகம் வேகவைத்த காய் கலவையையும் போட்டு, மசாலா பொடி, உப்பு சேர்த்து நன்றாக கிளறி ஒரு 3 நிமிடம் வேக விடவும்.
- பிறகு தேங்காய்பால் ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் அரிந்த கொத்தமல்லி போட்டு இறக்கி வைக்கவும்.
- சூடான சப்பாத்தி சப்ஜி தயார். இது சப்பாத்தி, மற்றும் சாதத்திற்கு ஏற்றது.
குறிப்பு:
- தேங்காய்ப்பால் ஊற்றி அதிக நேரம் கொதிக்க விடக்கூடாது.
- இங்கு பீன்ஸ் , உருளைக்கிலங்கிர்க்கு பதிலாக காரட், முள்ளங்கி போன்ற காய்களை சேர்க்கலாம்.
No comments:
Post a Comment