Pages

எலுமிச்சை சாதம்.


தேவையானவை:

அரிசி - 2 கப்.
எலுமிச்சைப்பழம் - (சிறியது) 1.
மஞ்சள் தூள் - 1 தே..
பச்சைமிளகாய் - 3.
உப்பு தேவையான அளவு.
எண்ணெய் - 5 தே.க.
கடுகு - 1 தே.க.
கடலைப்பருப்பு - 1 1/2 தே..
கருவேப்பிலை
கொத்தமல்லிஇலை.

செய்முறை:

  • அரிசியை கழுவி குழையாமல் பார்த்து வேகவைத்துக் கொள்ளவும்.
  • எலுமிச்சைபழத்தை பிழிந்து சாறு எடுத்து அதனுடன் மஞ்சள்தூள் சேர்த்து கலந்து வைக்க வேண்டும்.
  • பச்சைமிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வானலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி கடுகை போடவும்.
  • கடுகு வெடித்ததும் கடலைப்பருப்பு, பச்சைமிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
  • பிறகு மஞ்சள் தூள் கலந்த எலுமிச்சை சாருவை அதில் சேர்த்து நன்கு கலக்கி அடுப்பை அனைத்து விட வேண்டும்.
  • வேக வைத்த சாதத்தில் இந்த எலுமிச்சை கலவை சாறு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து சாதம் உடையாமல் மெதுவாக கிளறவும்.
  • நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறலாம்.
  • எலுமிச்சை சாதம் தயார்.


Recipe Courtesy : Suganya Kannan.

தேங்காய் சாதம்


தேவையானவை:

அரிசி - 2 கப்.
தேங்காய்(துருவியது) - 1 கப்.
சின்ன வெங்காயம் - 5.
பச்சைமிளகாய் - 3.
உப்பு தேவையான அளவு.
எண்ணெய் - 5 தே.க.
கடுகு.
முந்திரி - 6.
கருவேப்பிலை
கொத்தமல்லிஇலை.

செய்முறை:

  • அரிசியை கழுவி குழையாமல் பார்த்து வேகவைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி கடுகை போடவும்.
  • கடுகு வெடித்ததும் முந்திரியை போட்டு வதக்கவும்.
  • முந்திரி பொன்னிறமானதும் கருவேப்பிலை, பச்சைமிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்க்கவும்.
  • வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் தேங்காய் துருவல் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
  • பிறகு வேகவைத்த சாதம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து சாதம் உடையாமல் மெதுவாக கிளறவும்.
  • நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறலாம்.
  • தேங்காய் சாதம் தயார்.




Recipe Courtesy : Suganya Kannan.




கொத்தவரங்காய் குழம்பு கரி


தேவையானவை
:


கொத்தவரங்காய்(நறுக்கியது) - 1 கப்.
தேங்காய்(துருவியது) - 1/4 கப்.
வெங்காயம் - 1.
மஞ்சள் தூள் - 1 தே.க.
கொதமல்லிப்பொடி - 1 தே.க
சிகப்பு மிளகாய் - 3.
கடுகு.
சீரகம்.
வெள்ளைப்பூண்டு -2 பல்.
உப்பு தேவையான அளவு.
எண்ணெய் தேவையான அளவு.
கருவேப்பிலை.

செய்முறை:

  • வெங்காயம் மற்றும் வெள்ளைப்பூண்டை நறுக்கி வைத்துக் கொள்ளவேண்டும்.
  • தேங்காய் துருவல், சிறிதளவு சீரகம், மஞ்சள் தூள் மற்றும் கொதமல்லிப்பொடி சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவேண்டும்.
  • கொத்தவரங்காயை உப்பு சேர்த்து தண்ணீரில் வேக வைத்து கொள்ள வேண்டும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், சிகப்பு மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
  • பிறகு நறுக்கிய வெங்காயம் மற்றும் வெள்ளைப்பூண்டு சேர்த்து போநிரமாகும் வரை வதக்க வேண்டும்.
  • அதன்பின் வெந்த கொத்தவரங்காய் மற்றும் அரைத்த மசாலா விழுதை சேர்த்து வதக்க வேண்டும்.
  • தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
  • நன்றாக கொதித்ததும் அடுப்பை அணைத்து விட வேண்டும். சப்பாத்தி, பூரி மற்றும் சாதத்துடன் பரிமாறலாம்.
  • சூடான கொத்தவரங்காய் குழம்பு கரி தயார்.

ஆம்லெட் குழம்பு கரி


தேவையானவை:

முட்டை - 5.
சிகப்பு மிளகாய் - 7.
புளி - நெல்லிக்காய் அளவு.
சீரகம் - 1 தே.க.
வெங்காயம் - 5.
கொத்தமல்லி - 1 தே.க.
தேங்காய்(துருவியது) - 1 தே.க.
மஞ்சள் தூள் - 1/2 தே.க.
உப்பு தேவையான அளவு.
கொத்தமல்லி இல்லை.
எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

  • வெங்காயம் மற்றும் கொத்தமல்லி இலையை பொடிபொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • புளியை தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி அதனுடன் உப்பு மற்றும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தில் முக்கால் பங்கு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
  • அதனை சூடான கடாயில் ஆம்லெட்களாக சுட்டு எடுக்க வேண்டும். அதனை சிறிது பெரிய அளவிலான துண்டுகளாக வெட்டி வைக்க வேண்டும்.
  • தேங்காய், கொத்தமல்லி, சீரகம், சிகப்பு மிளகாய்,மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக அரிது வைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த விழுதுடன் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசல் சேர்த்து கலந்து வைக்க வேண்டும்.
  • ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் மீதியுள்ள வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
  • பிறகு அதில் அரைத்த விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை நாகு கிளர வேண்டும்.
  • அதன்பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிளறி கொதிக்க விட வேண்டும்.
  • குழம்பு கொதித்ததும் ஆம்லெட் துண்டுகளை போட்டு இரண்டு நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.
  • கொதித்ததும் அடுப்பை அணைத்து கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறவும்.
  • சூடான ஆம்லெட் குழம்பு கரி தயார்.

முட்டைக்கோஸ் கொப்தா கரி

முட்டைகோஸ் ஒரு கீரை வகையை சேர்ந்தது. இலைகள் ஒற்றன் மேலே ஒன்று மூடி காயைபோல் தோற்றம் அளிக்கிறது.

முட்டைகோஸ் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடக்கூடியது.



முட்டைக்கோஸில் அதிகப்படியான சத்துக்கள் மற்றும் அதிகமான மருத்துவ குணம் அடங்கியுள்ளது. இதனை பச்சையாகவும் அல்லது சமைத்தும் சாபிடலாம்.இதன் மருத்துவ பலன்கள் பின்வருமாறு.


  • முட்டைக்கோஸில் கீரையில் உள்ளது போல் வைட்டமின் சத்து ஏ உள்ளது. அதனால் கண் மற்றும் தோல்களுக்கு மிக நல்லது. பண்டைய காலத்தில் கிரேக்கர்கள் இதன் சாற்றை கண் வலி,கண் நோய்க்கு மருந்தாக பயன் படுத்தினார்களாம்.
  • புற்றுநோயின் தாக்கத்தை குறைக்க வல்லது. பொதுவாக நுரைஈரல், வயிறு மற்றும் குடல் சம்பந்தமான புற்றுநோயின் தாக்கத்தை குறைக்கிறது.
  • இது உடலின் தசை உருவாக்கத்திற்கு முக்கிய காரணியாக உதவுதிறது.
  • புதிய(Fresh) முட்டைகோஸின் சாறு வயிற்றுப்புண்ணை குணப்படுதுகிறது.
  • வைட்டமின் சத்து பி உள்ளதால் நரம்புகளுக்கு ஆற்றல் தருதிறது.
  • முட்டைக்கோஸில் வைட்டமின் சி மற்றும் டி அதிகமாக உள்ளதால் உடலில் உள்ள தேவைஇல்லாத கொழுப்புகள் கரைவதற்கும், தோல்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கவும் பயன்படுகின்றன. அதனால் உடல் எடை அதிகம் உள்ளவர்கள் இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் எடை குறையும்.
  • இதில் "Sulforaphane" எனப்படும் புற்றுநோயின் எதிரி உள்ளது.
  • இதில் "Anti-inflammatory" எனப்படும் புண், வீக்கம் போன்றவைகளுக்கான எதிரி உள்ளது. மேலும் இதில் லாக்டிக் ஆசிட் உள்ளதால் குடல் தொற்று நீக்கியாக செயல்படுகிறது.
  • 25 முதல் 50 கீழை வந்தால் தலை வலி, ஆஸ்துமா மற்றும் செரிமானம் பிரச்சனை எல்லாம் தீர்ந்துவிடும்.
  • இது இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு வலிமை உண்டாக்குகிறது.
  • முட்டைகோஸை அடிக்கடி உணவில் சேர்த்துவந்தால் பித்தம் நீர் அளவு சீரான நிலையில் இருக்கும்.

முட்டைகோஸின் கனமான தண்டுகளை நீக்கிவிட்டு சாபிடுவது நல்லது. இதில் அதிகமான அளவு கால்சியம் மற்றும் இரும்பு சத்துக்களும் உள்ளன. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு இது. சர்க்கரை நோயின் தாக்கத்தை இது கட்டுப்படுதுகிறது. முட்டைக்கோஸ் கொப்தா கரி செய்முறையை பற்றி காணலாம்.

தேவையானவை:

முட்டைக்கோஸ் - 150 கிராம்.
கடலை மாவு - 3 மே.க.
வெங்காயம் - 1.
தக்காளி - 2.
இஞ்சி - 1 இன்ச்.
ஏலக்காய் - 1.
பட்டை சிறிது - 1.
கிராம்பு - துரிவி.
சீரகம் - 1 தே.க.
கொத்தமல்லி - 1 தே.க.
உப்பு தேவையான அளவு.
எண்ணெய் வறுப்பதர்க்கான அளவு.
கொத்தமல்லி இலை.

செய்முறை:
  • வெங்காயம், தக்காளி, இஞ்சி, சீரகம், கொத்தமல்லி, ஏலக்காய், பட்டை, கிராம்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து விழுதாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  • கொத்தமல்லி இலையை நறுக்கி வைதுக்கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் முட்டைக்கோசை நறுக்கி வைத்து, அதனுடன் கடலைமாவு, அதற்க்கு தேவையான அளவு உப்பு மற்றும் குறைவான அளவு தண்ணீர் தெளித்து நன்றாக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்க வேண்டும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் வறுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி உருண்டைகளை பொறித்து எடுக்க வேண்டும்.
  • மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்றாக கிளர வேண்டும்.
  • அதனுடன் சிறிது உப்பு மற்றும் மிகச்சிறிதளவு சர்க்கரை சேர்த்து விழுதின் பச்சை வாசணை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும்.
  • குழம்பிலிருந்து எண்ணெய் தனியே பிரியும் வரை அதை வேகவிடவும்.
  • குழம்பு கெட்டியானால் சிறிதளவு தண்ணீர் சேர்க்க வேண்டும்.
  • குழம்பு வெந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு பொறித்து வைத்துள்ள கொப்தா உருண்டைகளை போடவேண்டும்.
  • நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலையை தூவி பரிமாறலாம்.
  • சூடான முட்டைக்கோஸ் கொப்தா கரி தயார்

மசாலாக்கோழி.


தேவையானவை
:


கோழி இறைச்சி - 200 கிராம்.
இஞ்சி வெள்ளைப்பூடு விழுது - 3 தே..
வெங்காயம் - 2.
தக்காளி - 1.
பச்சை மிளகாய் - 4.
மிளகாய்ப்பொடி - 2 தே.க.
கொத்தமல்லிப்பொடி - 2 தே.க.
மஞ்சள் தூள் - 1 தே.க.
மிளகுப்பொடி - 1 தே..
கரம் மசாலாப்பொடி - 1 தே..
உப்பு தேவையான அளவு.
எண்ணெய் தேவையான அளவு.
கொத்தமல்லி இலை.

தாளிப்பதற்கு :


கடுகு - 1/2 தே.க.
பெருஞ்சீரகம் - 1/2 தே..
சீரகம் - 1/2 தே.க.
கருவேப்பிலை.

செய்முறை:

  • கோழி இறைச்சியை நன்கு கழுவி மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்துஊறவிடவும்.
  • தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் கொத்தமல்லி இலையை நறுக்கி வைதுக்கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருள்கள் கடுகு, பெருஞ்சீரகம் மற்றும் சீரகத்தை அதி போட்டு தாளிக்கவும்.
  • பிறகு அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி வெள்ளைப்பூடு விழுது சேர்த்து அதன் பச்சை வாசணை போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
  • பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து வதக்கியப்பின், மிளகாய்ப்பொடி மற்றும் கொதமல்லிப்பொடி சேர்க்கவேண்டும்.
  • அதனுடன் ஊறவைத்துள்ள கோழி இறைச்சி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.(தண்ணீர் சேர்க்கக்கூடாது.)
  • தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கி, குறைவான தீயில் அடுப்பை வைத்து மூடி வைக்க வேண்டும்.
  • கடாய் அடிப் பிடிக்காமல் இருப்பதற்கு அவ்வப்போது கறியை நன்கு கிண்டவேண்டும்.
  • இறைச்சி வெந்ததும், மிளகுப்பொடி மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கிளறி அடுப்பை அணைக்க வேண்டும்.
  • சூடான மசாலாக்கோழி தயார்.
  • சப்பாத்தி அல்லது சாதத்துடன் பரிமாறலாம்.


Recipe Courtesy : Suganya Kannan.

மெது வடை

தேவையானவை:

உளுந்து - 1 கப்.
அரிசி மாவு - 1 தே.க.
வெங்காயம் - 10.
பச்சை மிளகாய் - 3.
மிளகு - 1 தே.க.
உப்பு தேவையான அளவு.
எண்ணெய் - 250 மி.லிட்டர்.
கொத்தமல்லி இலை.

செய்முறை:

  • உளுந்தை மூன்று மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் சேர்க்காமல் வழவழப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். (குறைவான அளவில் குளிர்ந்த நீரைக் கொண்டு, தெளித்து அரைக்கலாம்.)
  • வெங்காயம், கொத்தமல்லி இலை மற்றும் பச்சை மிளகாயை மெல்லியதாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • மிளகாய் ஒன்றிரண்டாக நசுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • அரைத்த உளுந்து மாவுடன் அரிசி மாவு, நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி இலை மற்றும் பச்சை மிளகாய், நசுக்கி வைத்துள்ள மிளகு, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
  • ஒரு கடையில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கைகளில் தண்ணீர் தொட்டு உளுந்து மாவு கலவையில் சிறிது எடுத்து உள்ளங்கையில் இல்லை, சிறிது தட்டையாக்கி நடுவில் ஒரு துளையிட்டு எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.
  • தேங்காய் சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறவும்.
  • சூடான மெது வடை தயார்.

குறிப்பு:

  • மெது வடையை 15 நிமிடங்கள் சாம்பாரில் ஊறவைத்தால் , அது சாம்பார் வடை.
  • 15 நிமிடங்கள் தயிரில் ஊற வைத்தால் தயிர் வடை .



Recipe Courtesy : Suganya Kannan.

மீன் ரவை வறுவல்


தேவையானவை:


மீன் - 1/2 கி.கிராம்.
எலுமிச்சைப்பழம் - பாதி.
ரவை - 1/2 கப்.
மிளகாய்ப்பொடி - 2 தே.க.
மஞ்சள் பொடி - 1 தே.க.
சோள மாவு - 1 தே.க.
பெருஞ்சீரகம் - 1 தே.க.
உப்பு தேவையான அளவு.
எண்ணெய் வறுப்பதற்கு.
கொத்தமல்லி இலை.



செய்முறை:


  • மீன்களை நன்றாக கழுவி, வறுப்பதர்க்கான அளவில் சிறு துண்டுகளாக்கவும்.
  • பெருஞ்சீரகத்தை ஒன்றிரண்டாக நசுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • கொத்தமல்லி இலையை பொடிபொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • எலுமிச்சைப்பழத்தை பிழிந்து சாறு எடுத்து அதில் மீன் துண்டுகளை நன்கு பிரட்டி ஒரு பத்து நிமிடங்கள் ஊற விடவும்.
  • பிறகு மீனுடன் ரவை, மிளகாய்ப்பொடி, மஞ்சள் பொடி, சோள மாவு, நசுக்கி வைத்துள்ள பெருஞ்சீரகம் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் இல்லாமல் ஒவ்வொரு மீன் துண்டுடன் நன்றாக கலக்கும்படி பிரட்டிவைக்க வேண்டும்.
  • இந்த கலவையை ஒரு பதினைந்து நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
  • பிறகு ஒரு கடாயில் வறுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், மீன் துண்டுகளை வறுத்து எடுக்க வேண்டும்.
  • வருத்த மீன் துண்டுகளின் மேல் நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறவும்.


Recipe Courtesy : Suganya Kannan.

இளநீர் பாஸந்தி


இளநீர் பாஸந்தி ஒரு புதுமையான பானம். இது கோடை காலத்திற்கு ஏற்ற பானம். இளநீரே, இயற்க்கை நமக்கு அளித்த வரம்தான். அதன் சத்துக்கள் என்னவென்று பாப்போம்.

Tender Coconut எனப்படும் இளநீரில் அதிகமான இயற்க்கை சத்துக்கள் அடங்கியுள்ளது. அதில் குளுகோஸ் மற்றும் பிரக்டோஸ் என்பதுதான் மிக முக்கிமானதாகும்.

மேலும் இதில் பொட்டாசியம், சோடியம், கால்சியம், அயர்ன் எனப்படும் இரும்பு சத்து, காப்பர், சல்பார் மற்றும் குளோரைட் போன்ற தாதுக்கள் உள்ளன. இதனால் இளநீர் சிறந்த Diuretic எனப்படும் சிறுநீர் பெருக்கியாக இருக்கிறது.




மேலும் இதில் குறைந்த அளவில் புரதம் உள்ளது. வைட்டமின் சத்துக்களான சி மற்றும் பி உள்ளன.

இது குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் குடல் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாகிறது.

உணவு ஜீரணமாக உதவுதிறது மற்றும் கர்பிணி பெண்களுக்கு ஏற்ப்படும் நெஞ்சு எரிச்சலை இது போக்குகிறது.

இளநீர் கோடை காலத்தில் ஏற்ப்படும் தோல் நோயையும் குணப்படுத்துகிறது. உடலின் வெப்பத்தை போக்கி குளுமை அடையச்செய்கிறது.


தேவையானவை:

இளநீர் வழுக்கை - 2
பால் -1 லிட்டர்.
சர்க்கரை - 3/4 கப்.
மில்க் மெய்ட் - 3 மே.க.
சோழ மாவு - 2 மே.க.
பாதாம்(துருவியது) - 1 மே.க.

செய்முறை:

  • இளநீர் வழுக்கையை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பாலை சர்க்கரையுடன் சேர்த்துக் காய்ச்ச வேண்டும்.
  • கொஞ்சம் பால் கெட்டியானதும் மில்க் மய்டை சேர்த்து இடைவிடாமல் கிளர வேண்டும்.(அடுப்பின் தீ சிறியதாக இருக்க வேண்டும்.)
  • பிறகு சோழ மாவை கால் டம்ளர் பாலில் கரித்து இதில் ஊற்ற வேண்டும். இதனை பாத்து நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.
  • அதன் பிறகு இதனை இறக்கி ஆறவிட வேண்டும்.
  • ஆறியதும் ஒரு பாத்திரத்தில் ஊற்றி துருவிய பாதாம் மற்றும் நறுக்கிய இளநீர் வழுக்கையை சேர்த்தி நன்றாக கலந்து குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும்.
  • குளிர்ந்ததும் பருகினால் சுவை அபாரமாக இருக்கும்.

சேப்பங்கிழங்கு குழம்புக்கறி

Eddoes எனப்படும் சேப்பங்கிழங்கு கிழங்கு வகையைச் சேர்ந்தது. இதன் தன்மைகள் பின்வருமாறு:

  • சேப்பங்கிழங்கு நரம்புத்தளர்ச்சியை போக்குகிறது.
  • இதில் உள்ள குளுக்கோஸ் மெதுவாக உடலில் உட்கிரகிக்கிறது.
  • வயிற்றில் உள்ள பித்த நீரை அகற்றுகிறது.
  • மலசிக்கலை நீக்குகிறது.
  • உடலின் கொழுப்பின் அளவை குறைக்கிறது.
  • Colorectal Cancer எனப்படும் குடல்ப்புற்று நோய் வராமல் தடுக்கிறது.
  • சேப்பங்கிழங்கை அடிக்கடி சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல.
  • சேப்பங்கிழங்கு அடிக்கடி சாப்பிடுவதால் கோழை கட்டும், இருமல் உண்டாகும். அதனால் இதனுடன் இஞ்சி, வெள்ளை பூண்டு அல்லது புளி சேர்த்து சாபிடுவதால் கெடுதல் குறையும்.
  • வாதநோய் இருப்பவர்கள் இதை சாப்பிடக்கூடாது.
  • இது மருந்தின் வீரியத்தை கட்டுப்படுத்தும். ஆகையால் மற்ற நோய்க்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் இதை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

தேவையானவை:

சேப்பங்கிழங்கு - 150 கிராம்.
புளிக்கரைசல் - 1/4 கப்.
பச்சைப்பயறு - 3 தே.க.
தேங்காய் விழுது - 3 தே.க.
இஞ்சி விழுது - 1/2 தே.க.
அரிசிமாவு - 1/2 தே.க.
மிளகுப்பொடி - 1 தே.க.
சீரகப்பொடி - 1 தே.க.
மஞ்சள் தூள் - 1 தே.க.
தேங்காய் எண்ணெய் - 2 மே.க.
கடுகு
கறிவேப்பிலை
உப்பு தேவையான அளவு.




செய்முறை
:
  • சேப்பங்கிழங்கை வேக வைத்து தோலுரித்துக் கொள்ளவும்.
  • பச்சைப்பயரை வேக வைத்து அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வானலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
  • அதில் இஞ்சி விழுது சேர்க்கவும். அதன் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.
  • அதனுடன் மிளகுப்பொடி, சீரகப்பொடி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
  • பிறகு பச்சைப்பயறு விழுது மற்றும் தேங்காய் விழுது சேர்த்து வதக்கவும்.
  • இதனுடன் அரிசிமாவு சேர்த்து புளிக்கரைசலை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இதனை இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
  • வேகவைத்த சேப்பங்கிழங்கை அதில் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
  • சூடான சேப்பங்கிழங்கு குழம்புக்கறி தயார்.

வெற்றிலைக் கோழி

தேவையானவை:

கோழி இறைச்சி(எலும்பு இல்லாமல்) - 1/2 கி.கிராம்.
வெற்றிலை - 3.
அரிசி மாவு - 1 தே.க.
பச்சைப்பயறு - 3 தே.க.
சீரகப்பொடி - 1 தே.க.
சோம்புப்பொடி - 1 தே.க.
மிளகுப்பொடி - 1 தே.க.
இஞ்சி விழுது - 1 தே.க.
உப்பு தேவையான அளவு.
எண்ணெய் வறுப்பதற்கு.




செய்முறை:
  • ஒரு வானலியில் பச்சைப்பயறை எண்ணெய் இல்லாமல் வறுத்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • கோழியை வறுப்பதற்கு தகுந்தார்ப் போல் சிறிது பாகங்களாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • வெற்றிலையை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • கோழியுடன் அரிசிமாவு, வறுத்த பச்சைப்பயறு பொடி, சீரகப்பொடி, சொம்புப்போடி, மிளகுப்பொடி, நறுக்கிய வெற்றிலை, இஞ்சி விழுது மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து வைத்துக்கொள்ளவும்.
  • இதனை ஒரு 20 நிமிடங்கள் ஊறவிடவும்.
  • அதன் பிறகு, ஒரு வானலியில் எண்ணெய் காயவைத்து கோழியை போரிதடுக்க வேண்டும்.
  • வெற்றிலை மனத்துடன் புதுமையான கோழி வறுவல் தயார்.

சப்பாத்தி சப்ஜி

தேவையானவை:

பீன்ஸ் - 100 கிராம்
உருளைக்கிழங்கு - 100 கிராம்.
வெங்காயம் - 2.
தேங்காய் பாதி.
மசாலா பொடி - 2 மே.க.
இஞ்சி - 1 இன்ச்.
பூண்டு - 5 பல்.
பச்சை மிளகாய் - 3.
எண்ணெய் தேவையான அளவு.
உப்பு தேவையான அளவு.
கொத்தமல்லி இலை.

செய்முறை:

  • பீன்ஸ், உருளைக்கிழங்கு, வெங்காயம், இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய்,கொத்தமல்லி இலை இவைகளை தனித்தனியே அரிந்து வைக்கவும்.
  • பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கை முக்கால் பாகம் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • தேங்காயை அரைத்து பால் எடுத்து தனியே வைக்கவும்.
  • அடுப்பில் ஒரு வானலி வைத்து சூடானதும், சிறிது எண்ணெய் ஊற்றி அரிந்து வைத்துள்ள வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் அரிந்து வைத்துள்ள இஞ்சி மற்றும் பூண்டை போடவும். இதன் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதங்க விடவும்.
  • இதனுடன் பச்சை மிளகாயையும் சேர்த்து, இதற்கு தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
  • இவை வதங்கியதும் ஆறவைத்து அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்து வைத்துள்ள கலவையை ஒரு வானலியில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் போட்டு நன்றாக கிளர வேண்டும்.
  • அதில் முக்கால் பாகம் வேகவைத்த காய் கலவையையும் போட்டு, மசாலா பொடி, உப்பு சேர்த்து நன்றாக கிளறி ஒரு 3 நிமிடம் வேக விடவும்.
  • பிறகு தேங்காய்பால் ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் அரிந்த கொத்தமல்லி போட்டு இறக்கி வைக்கவும்.
  • சூடான சப்பாத்தி சப்ஜி தயார். இது சப்பாத்தி, மற்றும் சாதத்திற்கு ஏற்றது.

குறிப்பு
:


  • தேங்காய்ப்பால் ஊற்றி அதிக நேரம் கொதிக்க விடக்கூடாது.
  • இங்கு பீன்ஸ் , உருளைக்கிலங்கிர்க்கு பதிலாக காரட், முள்ளங்கி போன்ற காய்களை சேர்க்கலாம்.