Pages

மக்காசோளம் சூப்

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த திரவ உணவு சூப். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. இது சைவம் மற்றும் அசைவ உணவு வகைகளில் தயாரிக்கலாம்.

காய்கறிகள், கீரை வகைகள் மற்றும் இறைச்சி வகைகள் போன்றவற்றை நீரில் வேகவைப்பத்தின் மூலம் அல்லது வேகவைத்த பொருள்களை சூடான தண்ணீரில் கலப்பதின் மூலம் இதனை தயாரிக்கலாம்.

சூப் என்ற திரவ பானத்தை தெளிவான சூப் மற்றும் அடர்த்தியான சூப் என இருவகையாகப் பிரிக்கலாம். சூப் அடர்த்தியா இருக்க அரிசி மாவு, சோழ மாவு, முட்டை, வெண்ணெய், பாலாடை போன்றவற்றை சேர்க்கலாம். சத்துக்கள் நிறைந்த சூப்பிற்கு பாலாடை மற்றும் வெண்ணெய் போன்றவற்றை தவிர்க்கலாம்.

காய்கறி சூப்பில் சேர்க்கப்படும் அனைத்து காய்கறிகளின் சத்துக்கள் முழுமையாக அந்த சூப்பில் காணப்படுகிறது. உணவில் அக்கறை இல்லாத சில குழந்தைக்களுக்கு இந்த சத்துக்கள் நிறைந்த சூப் கொடுப்பதால் அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து இதன் மூலம் கிடைக்கப் பெறுகிறது.

ஊடச்சது நிறைந்த சூப்பானது சளி, இருமல் போன்றவற்றை போக்குகிறது. எலும்புகள் வலுவாக இருக்க உதவுகிறது.

தேவையானவை:

மக்காசோளம் - 1/2 கப்.
முட்டைக்கோஸ்(அரிந்தது) - 1/2 கப்.
காரட்(அரிந்தது) - 1/2 கப்.
பால் சிறிதளவு.
உப்பு தேவையான அளவு.
மிளகு பொடி தாவையான அளவு.




செய்முறை:

  • முதலில் மக்காசோளம், முட்டைகோஸ், காரட் ஆகியவைகளை தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.
  • வேகவைத்த காய்களில் இரண்டு மேஜைக்கரண்டி அளவு மக்காசோளம் மட்டும் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • மீதம் உள்ள வேகவைத்த அனைத்து காய்கறிகளையும் நன்றாக ஆறியவுடன் மிக்ஸ்-இல் அரைக்கவும்.
  • அதனை வடிகட்டி எடுத்த ஜூஸ் வுடன் தனியே எடுத்து வைத்துள்ள மக்காசோள பற்களையும் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
  • கொதித்ததும் கொஞ்சம் பால் மற்றும் சிறிது உப்பு சேர்த்து கலக்கவும்.
  • அதனுடன் சிறிது மிளகு பொடி சேர்த்து அடுப்பை அணைக்க வேண்டும்.
  • சூடான மக்காசோள சூப் தயார்.
இங்கே மக்காசோளம் பதிலாக தக்காளி, காரட் போன்ற காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.

முலாம் பழம் மில்க் ஷேக்

முலாம் பழம் மில்க் ஷேக் (MuskMelon Milk Shake). இது ஒரு புதுமையான மற்றும் மிக சத்தான பானம். இந்த பானத்தோட சுவை பதாம் பால் போன்று இருக்கும். இந்த மில்க் ஷேக் எப்படி பண்றதுன்னு பாக்கிறதுக்கு முன்னாடிமுலாம் பழத்தை பற்றி பார்க்கிறது மிக அவசியம்.

முலாம் பழம் கோடை காலத்தில் மிக எளி தாக கிடைக்கக் கூடியது. இது அதிகப்படியான சத்துக்கள் அடங்கியுள்ள ஒரு நீர்ப்பழம். பல உடல் உபாதைகளுக்கும் அருமருந்தாக இருக்கிறது.





அவையாவன
:

  • முலாம் பழத்தில் fibre என்று சொல்லக்கூடிய நார்ச்சத்து மிக அதிகமாக உள்ளதால் மலசிக்கலை போக்குகிறது.
  • இதில் பொட்டாசியம் உள்ளதால் அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்குஇரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
  • வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால் இதய நோய், புற்று நோய் வராமல்பாதுகாக்கிறது. மிக முக்கியமாக Stroke எனப்படும் பக்கவாதத்தை வராமல்பாதுகாக்கிறது.
  • இது நீர்ப்பழம் என்பதால் இதை உண்பதால் உடம்பின் உஷ்ணத்தைகுறைக்கிறது.
  • அல்சர், சிறுநீர் சம்பந்தமான நோய், உணவு செரிப்புதன்மை குறைதல் போன்ற பிரச்சினைகள் போக்குறதர்க்கும் இது உபயோகமாகிறது.
  • இதில் Folic Acid உள்ளதால் கர்ப்பமான பெண்கள் சாப்பிட வேண்டியஅருமருந்து இது.
  • இந்த பழம் கிட்னியில் உள்ள கல்லை ரைக்கக்கூடியது. மேலும் முதுமைகாலத்தில் ஏற்ப்படும் எலும்பு தேய்மானத்தை தடுக்கிறது.
  • பெண்களுக்கு ஏற்ப்படும் Cervical Cancer மற்றும் osteoporosis எனப்படும் நோய்களை அண்டவிடாமல் பாதுகாக்கிறது.
  • இந்த பழத்தினை உண்டால் உடல் உள்ளுறுப்புகள் பாதுகாப்பாகஇருப்பதோடு அழகும் மேம்படும். இதில் அதிகமாக வைட்டமின் மற்றும்வைட்டமின் சி உள்ளதால் சருமம் ஆரோக்யமாகவும், தோல் மினு மினுப்புகூடும்.
  • உடல் சோம்பலை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கிறது. உடல் எடை குறைக்க இது உதவுகிறது.
முலாம் பழம் தாகம் தீர்க்கும் கோடை பழம் மட்டும் இல்லை. அனைவரும் கிடைக்கும் போது உண்டு அதன் பலனை பெறவேண்டிய அவசியம் உள்ளது. இப்பொழுது முலாம் பழம் மில்க் ஷேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.


தேவையானவை:

முலாம் பழம்-1
பால்-4 கப்.
சர்க்கரை தேவையான அளவு.
பேரீச்சம்பழம் - 6.

செய்முறை:
  • முலாம் பழத்தின் தோல் மற்றும் விதைகளை நீக்கி துண்டுகளாக்கவும்.
  • பேரீச்சம்பழத்தினை சூடான பால் அல்லது சூடான தண்ணீரில் ஒரு மணிநேரம் ஊறவைக்கவும். (ஊரவைப்பதால் அரைக்கும் பொழுது எளிதில் நன்றாக அரைவதுடன் பழச்சாறுவுடன் நன்றாக கலக்கும்.
  • பழத்துண்டுகள், பால், பேரீச்சம்பழம் மற்றும் சர்க்கரை சேர்த்து mixi-இல்போட்டு நன்றாக அரைக்கவும்.
  • ருசியான மில்க் ஷேக் தயார்.

உருளைக்கிழங்கு அல்வா

உருளைக்கிழங்கு அல்வா, இது தென்னிந்திய இனிப்பு வகை உணவு. வீட்டில்தேவையான பொருள்களை வைத்து குறைவான நேரத்தில் மிகச் சுலபமாகசெய்யக்கூடியது.






தேவையானவை:

உருளைக்கிழங்கு-1/4 கிலோ.
கோவா-1 கப்.
சர்க்கரை தேவையான அளவு.
நெய் தேவையான அளவு.
முந்திரி,காய்ந்த திராட்சை தேவையான அளவு.


செய்முறை:
  • உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுறித்து மசித்து வைத்துகொள்ளவும்.
  • அலவா செயக்கூடிய பாத்திரத்தில் அரை கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கி கொள்ளவும்.
  • அதில் தேவையான அளவு சர்க்கரையைப் போட்டு சர்க்கரை கரையும் வரை நன்றாகக் கலக்கவும்.
  • சர்க்கரை கரைந்தவுடன் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை அதில்போட்டு நன்றாக கலக்கவும்.
  • சிறிது நேரம் கழித்து கோவாவையும் அதில் சேர்த்து, ஒன்றாக கலக்கும் வரை கிளறவும். அதில் இரண்டு மே.கரண்டி நெய் விட்டு நன்றாக கலக்கவும்.
  • அல்வா பதத்திற்கு கலவை வந்தவுடன் மற்றொரு பாத்திரத்தில் நெய் விட்டு முந்திரி மற்றும் காய்ந்த திராட்சையை போட்டு சிறிது வதங்கியதும், அல்வா கலவையில் போட்டு நன்றாக கலந்து, இறக்கி வைக்கவும்.
  • சூடான, ருசியான அல்வா தயார்.


ஸ்டஃப்டு வாழைக்காய் பராட்டா

வாழைக்காய் பராட்டா, இந்திய உணவு வகைகளில் இது சாதரணமாக செய்யக்கூடியது. இதனை செய்யும் முன் வாழைக்காயின் சத்துக்கள் என்ன என்பதனைக் காணலாம்.



ஊட்டச்சத்து அதிகம் உள்ள காய்வகைகளில் வாழைக்காயும் ஒன்று.

சமைத்த வாழைக்காயில் கொழுப்புச்சத்து, மற்றும் உப்பு மிகக் குறைவாகவும், Fibre எனப்படும் நார்ச்சத்து மற்றும் Starch எனப்படும் மாச்சத்து அதிகமாகவும் காணப்படுகிறது.

ஒரு சராசரி அளவான சமைத்த வாழைக்காயின் ஊட்டச்சத்தின் மதிப்பீடு:

மாவுச்சத்து 50 - 8o கிராம்.

நார்ச்சத்து 4 - 5 கிராம்.

புரதம் 2 - 3 கிராம்.

கொழுப்புச்சத்து 0.01 - 0.03 கிராம்.

வாழ்க்காயில் அதிக அளவில் பொட்டாசியம், மெக்னீசியம், மற்றும் பாஸ்பேட் உள்ளது. இதில் உள்ள பொட்டாசியம் இதயத்திற்கு நல்லது; மேலும் இது இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் வராமல் பாதுகாக்கிறது.

மேலும் இதில் வைட்டமின் எ, பி6 மற்றும் சி போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளதால், பார்வை தெளிவாவதர்க்கும், தோல் பாதுகாப்பிற்கும் மற்றும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் உதவுதிறது.

வாழைக்காய் உணவு நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ஏற்றதாகும்.

வாழைக்காய் பச்சையாக உண்ண உகந்தது அல்ல.


தேவையானவை
:


வாழைக்காய்-1
கோதுமை - 3/4 கப்
மைதா -1/4
கப்
கொத்தமல்லி இலை சிறிது
பச்சைமிளகாய் விழுது -2 மே.க
எலுமிச்சை சாறு -2
மே.க
எள்ளு சிறிது
உப்பு தேவையான அளவு

எண்ணெய் தேவையான் அளவு

செய்முறை:

  • வாழக்காயை வேகவைத்து தோலுரித்து வைத்து கொள்ள வேண்டும்.
  • கோதுமை, மைதா, உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் பிசைந்து கொள்ள வேண்டும்.
  • வாழைக்காய், உப்பு, பச்சை மிளகாய் விழுது, எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். (சிறிது நீராகஇருந்தால் கொஞ்சம் மைதா மாவு சேர்த்து கொள்ள வேண்டும்).
  • கோதுமை கலவை மாவில் கொஞ்சம் எடுத்து அதன் நடுவில் சிறிதுவாழைக்காய் கலவையை உள் வைத்து மூடி, சிறிது கைகளால் தட்டையாக்கிகொள்ள வேண்டும்.
  • பின்னர் அதனை எள்ளில் முன் , பின் பக்கம் தொய்த்து, பின்னர் மைதாமாவில்தொய்த்து சப்பாத்தி மாதிரி தேய்க்கவும்.
  • இதனை தோசைக்கல்லில் மொரு மொருவென வரும் வரை எண்ணெய்விட்டு வேக வைக்க வேண்டும்.

ஸ்டஃப்டு
வாழைக்காய் பராட்டா ready.

இது
செய்றது ரொம்ப சுலபம். இதற்கு sidishes தக்காளி சட்னி, தேங்காய் சட்னி எதுவும் நல்லா இருக்கும், sidish இல்லைனால்லும் நல்லா இருக்கும்
.

சோயா சப்பாத்தி


சோயா சப்பாத்தி, மிக சத்தான உணவு .வீட்டில் உள்ள அனைவருக்கும் ஏற்றது.

முதலில் சோயாவின் சத்துக்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். சோயாவில் அதிகமாக புரதம், மெக்னீசியம், நார்ச்சத்து (fibre), கால்சியம்உள்ளது. இதில் L.d.L எனப்படும், Low Density Lipids என்கின்ற கெட்டகொலஸ்ட்ராலை நம் உடலில் சேர விடாது. இதனால் குழந்தைகள், பெண்கள்மற்றும் பெரியவர்கள் அனைவருக்கும் ஏற்றது இந்த சோயா.


சோயா கடைகளில் பல வடிவங்களில் கிடைக்கிறது. சோயா பீன்ஸ், சோயாபால், சோயா உருண்டை(soya chunk), எண்ணெய் , சோயா பனீர், சோயா மாவு,சோயா குருனை மற்றும் பல வகைகளில் கிடைக்கிறது.

சோயா
சப்பாத்தி செய்முறை பற்றி பாப்போம்.


தேவையானவை:

சோயா மாவு - 1 cup
கோதுமை மாவு -1
cup
சோம்பு - 1
மே.க
மிளகாய்தூள்-1
மே.க
தேவையான அளவு உபபு
நெய் - 3
மே.க.



செய்முறை:

  • நெய் தவிர எல்லா பொருள்களையும் சிறிதுதண்ணீர் விட்டு நன்றாக சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ள வேண்டும்.
  • இதை ஒன்று முதல் இரண்டு மணி நேரம் ஊற விடவும்.
  • பின்னர் இதில் சிறிது எடுத்து சப்பதியாக இட்டு சூடான சப்பாத்தி கல்லில் போட்டு, நெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
  • சூடான , சுவையான சோயா சப்பாத்தி தயார்.
குறிப்பு:

இங்கு சோயா சப்பாத்தி செய்ய சோயா மாவு இல்லை என்றால் அதற்கு பதிலாக சோயா உருண்டைகளை ஊற வைத்து அரைத்த விழுது ஒரு கப் சேர்த்துக்கொள்ளலாம்.

சப்பாத்திக்கு கோதுமை மாவு அரைக்கும் பொழுது ஒரு கிலோ கோதுமைக்கு 150 கிராம் சோயா சேர்த்து அரைத்து வைத்து கொள்ளலாம். அந்த மாவில் சப்பாத்தி செய்தால் சப்பாத்தி ருசியாக இருக்கும்.