தேவையானவை:
அரிசி - 2 கப்.
எலுமிச்சைப்பழம் - (சிறியது) 1.
மஞ்சள் தூள் - 1 தே.க.
பச்சைமிளகாய் - 3.
உப்பு தேவையான அளவு.
எண்ணெய் - 5 தே.க.
கடுகு - 1 தே.க.
கடலைப்பருப்பு - 1 1/2 தே.க.
கருவேப்பிலை
கொத்தமல்லிஇலை.
செய்முறை:
- அரிசியை கழுவி குழையாமல் பார்த்து வேகவைத்துக் கொள்ளவும்.
- எலுமிச்சைபழத்தை பிழிந்து சாறு எடுத்து அதனுடன் மஞ்சள்தூள் சேர்த்து கலந்து வைக்க வேண்டும்.
- பச்சைமிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு வானலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி கடுகை போடவும்.
- கடுகு வெடித்ததும் கடலைப்பருப்பு, பச்சைமிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
- பிறகு மஞ்சள் தூள் கலந்த எலுமிச்சை சாருவை அதில் சேர்த்து நன்கு கலக்கி அடுப்பை அனைத்து விட வேண்டும்.
- வேக வைத்த சாதத்தில் இந்த எலுமிச்சை கலவை சாறு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து சாதம் உடையாமல் மெதுவாக கிளறவும்.
- நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறலாம்.
- எலுமிச்சை சாதம் தயார்.
Recipe Courtesy : Suganya Kannan.
No comments:
Post a Comment