தேவையானவை:
மசாலாப்பொடி - 2 தே.க.
வெள்ளை பூண்டு - 6 பல்.
பெருஞ்சீரகம்.
உபபு தேவையான அளவு.
எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை:
செய்முறை:
- பிஞ்சு கத்தரிக்காய்களின் காம்புகளை மட்டும் நீக்கிவிட்டு நன்றாக கழுவ வேண்டும்.
- கத்தரிக்காய்களை மேல்பக்கமாக நான்கு பாகங்களாக பிளக்க வேண்டும்.(பிரிக்க வேண்டாம்).
- வெள்ளைப்பூடுகளின் தோலுரித்து, அதனை மசித்து வைக்க வேண்டும்.
- அடுப்பில் வானலியை வைத்து சூடானதும், சிறிது அதிகமான அளவு எண்ணெய் ஊற்ற வேண்டும்.
- எண்ணெய் காய்ந்ததும், அதில் பெருஞ்சீரகம் போட்டு தாளிக்கவும்.
- பிறகு அதில் மசித்த வெள்ளைப்பூண்டு போட்டு வதக்க்கவும்.
- பச்சை வாசணை போனதும் கத்தரிக்காய்களை போட்டு வதக்க்கவும்.
- பிறகு மசாலாப்பொடி மற்றும் தேவையான அளவு உபபு சேர்த்து நன்றாக வதக்கவும்.
- தேவையென்றால் சிறிது எண்ணெய் ஊற்றி வேக விட வேண்டும்.இதனை பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் வரை நன்றாக கிளறிவிட்டுக் கொண்டே வேகவிடவேண்டும்.
- முட்டை கத்தரிக்காய் தயார்.