Pages

இளநீர் பாஸந்தி


இளநீர் பாஸந்தி ஒரு புதுமையான பானம். இது கோடை காலத்திற்கு ஏற்ற பானம். இளநீரே, இயற்க்கை நமக்கு அளித்த வரம்தான். அதன் சத்துக்கள் என்னவென்று பாப்போம்.

Tender Coconut எனப்படும் இளநீரில் அதிகமான இயற்க்கை சத்துக்கள் அடங்கியுள்ளது. அதில் குளுகோஸ் மற்றும் பிரக்டோஸ் என்பதுதான் மிக முக்கிமானதாகும்.

மேலும் இதில் பொட்டாசியம், சோடியம், கால்சியம், அயர்ன் எனப்படும் இரும்பு சத்து, காப்பர், சல்பார் மற்றும் குளோரைட் போன்ற தாதுக்கள் உள்ளன. இதனால் இளநீர் சிறந்த Diuretic எனப்படும் சிறுநீர் பெருக்கியாக இருக்கிறது.




மேலும் இதில் குறைந்த அளவில் புரதம் உள்ளது. வைட்டமின் சத்துக்களான சி மற்றும் பி உள்ளன.

இது குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் குடல் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாகிறது.

உணவு ஜீரணமாக உதவுதிறது மற்றும் கர்பிணி பெண்களுக்கு ஏற்ப்படும் நெஞ்சு எரிச்சலை இது போக்குகிறது.

இளநீர் கோடை காலத்தில் ஏற்ப்படும் தோல் நோயையும் குணப்படுத்துகிறது. உடலின் வெப்பத்தை போக்கி குளுமை அடையச்செய்கிறது.


தேவையானவை:

இளநீர் வழுக்கை - 2
பால் -1 லிட்டர்.
சர்க்கரை - 3/4 கப்.
மில்க் மெய்ட் - 3 மே.க.
சோழ மாவு - 2 மே.க.
பாதாம்(துருவியது) - 1 மே.க.

செய்முறை:

  • இளநீர் வழுக்கையை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பாலை சர்க்கரையுடன் சேர்த்துக் காய்ச்ச வேண்டும்.
  • கொஞ்சம் பால் கெட்டியானதும் மில்க் மய்டை சேர்த்து இடைவிடாமல் கிளர வேண்டும்.(அடுப்பின் தீ சிறியதாக இருக்க வேண்டும்.)
  • பிறகு சோழ மாவை கால் டம்ளர் பாலில் கரித்து இதில் ஊற்ற வேண்டும். இதனை பாத்து நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.
  • அதன் பிறகு இதனை இறக்கி ஆறவிட வேண்டும்.
  • ஆறியதும் ஒரு பாத்திரத்தில் ஊற்றி துருவிய பாதாம் மற்றும் நறுக்கிய இளநீர் வழுக்கையை சேர்த்தி நன்றாக கலந்து குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும்.
  • குளிர்ந்ததும் பருகினால் சுவை அபாரமாக இருக்கும்.

No comments:

Post a Comment