தேவையானவை:
மீன் - 1/2 கி.கிராம்.
எலுமிச்சைப்பழம் - பாதி.
ரவை - 1/2 கப்.
மிளகாய்ப்பொடி - 2 தே.க.
மஞ்சள் பொடி - 1 தே.க.
சோள மாவு - 1 தே.க.
பெருஞ்சீரகம் - 1 தே.க.
உப்பு தேவையான அளவு.
எண்ணெய் வறுப்பதற்கு.
கொத்தமல்லி இலை.
செய்முறை:
- மீன்களை நன்றாக கழுவி, வறுப்பதர்க்கான அளவில் சிறு துண்டுகளாக்கவும்.
- பெருஞ்சீரகத்தை ஒன்றிரண்டாக நசுக்கி வைத்துக் கொள்ளவும்.
- கொத்தமல்லி இலையை பொடிபொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- எலுமிச்சைப்பழத்தை பிழிந்து சாறு எடுத்து அதில் மீன் துண்டுகளை நன்கு பிரட்டி ஒரு பத்து நிமிடங்கள் ஊற விடவும்.
- பிறகு மீனுடன் ரவை, மிளகாய்ப்பொடி, மஞ்சள் பொடி, சோள மாவு, நசுக்கி வைத்துள்ள பெருஞ்சீரகம் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் இல்லாமல் ஒவ்வொரு மீன் துண்டுடன் நன்றாக கலக்கும்படி பிரட்டிவைக்க வேண்டும்.
- இந்த கலவையை ஒரு பதினைந்து நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
- பிறகு ஒரு கடாயில் வறுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், மீன் துண்டுகளை வறுத்து எடுக்க வேண்டும்.
- வருத்த மீன் துண்டுகளின் மேல் நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறவும்.
Recipe Courtesy : Suganya Kannan.
Your Fish fried is so supper! continue your post more
ReplyDelete