- சேப்பங்கிழங்கு நரம்புத்தளர்ச்சியை போக்குகிறது.
- இதில் உள்ள குளுக்கோஸ் மெதுவாக உடலில் உட்கிரகிக்கிறது.
- வயிற்றில் உள்ள பித்த நீரை அகற்றுகிறது.
- மலசிக்கலை நீக்குகிறது.
- உடலின் கொழுப்பின் அளவை குறைக்கிறது.
- Colorectal Cancer எனப்படும் குடல்ப்புற்று நோய் வராமல் தடுக்கிறது.
- சேப்பங்கிழங்கை அடிக்கடி சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல.
- சேப்பங்கிழங்கு அடிக்கடி சாப்பிடுவதால் கோழை கட்டும், இருமல் உண்டாகும். அதனால் இதனுடன் இஞ்சி, வெள்ளை பூண்டு அல்லது புளி சேர்த்து சாபிடுவதால் கெடுதல் குறையும்.
- வாதநோய் இருப்பவர்கள் இதை சாப்பிடக்கூடாது.
- இது மருந்தின் வீரியத்தை கட்டுப்படுத்தும். ஆகையால் மற்ற நோய்க்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் இதை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
தேவையானவை:
சேப்பங்கிழங்கு - 150 கிராம்.
புளிக்கரைசல் - 1/4 கப்.
பச்சைப்பயறு - 3 தே.க.
தேங்காய் விழுது - 3 தே.க.
இஞ்சி விழுது - 1/2 தே.க.
அரிசிமாவு - 1/2 தே.க.
மிளகுப்பொடி - 1 தே.க.
சீரகப்பொடி - 1 தே.க.
மஞ்சள் தூள் - 1 தே.க.
தேங்காய் எண்ணெய் - 2 மே.க.
கடுகு
கறிவேப்பிலை
உப்பு தேவையான அளவு.
செய்முறை:
- சேப்பங்கிழங்கை வேக வைத்து தோலுரித்துக் கொள்ளவும்.
- பச்சைப்பயரை வேக வைத்து அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு வானலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
- அதில் இஞ்சி விழுது சேர்க்கவும். அதன் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.
- அதனுடன் மிளகுப்பொடி, சீரகப்பொடி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
- பிறகு பச்சைப்பயறு விழுது மற்றும் தேங்காய் விழுது சேர்த்து வதக்கவும்.
- இதனுடன் அரிசிமாவு சேர்த்து புளிக்கரைசலை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இதனை இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
- வேகவைத்த சேப்பங்கிழங்கை அதில் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
- சூடான சேப்பங்கிழங்கு குழம்புக்கறி தயார்.
No comments:
Post a Comment