Pages

முட்டைக்கோஸ் கொப்தா கரி

முட்டைகோஸ் ஒரு கீரை வகையை சேர்ந்தது. இலைகள் ஒற்றன் மேலே ஒன்று மூடி காயைபோல் தோற்றம் அளிக்கிறது.

முட்டைகோஸ் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடக்கூடியது.



முட்டைக்கோஸில் அதிகப்படியான சத்துக்கள் மற்றும் அதிகமான மருத்துவ குணம் அடங்கியுள்ளது. இதனை பச்சையாகவும் அல்லது சமைத்தும் சாபிடலாம்.இதன் மருத்துவ பலன்கள் பின்வருமாறு.


  • முட்டைக்கோஸில் கீரையில் உள்ளது போல் வைட்டமின் சத்து ஏ உள்ளது. அதனால் கண் மற்றும் தோல்களுக்கு மிக நல்லது. பண்டைய காலத்தில் கிரேக்கர்கள் இதன் சாற்றை கண் வலி,கண் நோய்க்கு மருந்தாக பயன் படுத்தினார்களாம்.
  • புற்றுநோயின் தாக்கத்தை குறைக்க வல்லது. பொதுவாக நுரைஈரல், வயிறு மற்றும் குடல் சம்பந்தமான புற்றுநோயின் தாக்கத்தை குறைக்கிறது.
  • இது உடலின் தசை உருவாக்கத்திற்கு முக்கிய காரணியாக உதவுதிறது.
  • புதிய(Fresh) முட்டைகோஸின் சாறு வயிற்றுப்புண்ணை குணப்படுதுகிறது.
  • வைட்டமின் சத்து பி உள்ளதால் நரம்புகளுக்கு ஆற்றல் தருதிறது.
  • முட்டைக்கோஸில் வைட்டமின் சி மற்றும் டி அதிகமாக உள்ளதால் உடலில் உள்ள தேவைஇல்லாத கொழுப்புகள் கரைவதற்கும், தோல்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கவும் பயன்படுகின்றன. அதனால் உடல் எடை அதிகம் உள்ளவர்கள் இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் எடை குறையும்.
  • இதில் "Sulforaphane" எனப்படும் புற்றுநோயின் எதிரி உள்ளது.
  • இதில் "Anti-inflammatory" எனப்படும் புண், வீக்கம் போன்றவைகளுக்கான எதிரி உள்ளது. மேலும் இதில் லாக்டிக் ஆசிட் உள்ளதால் குடல் தொற்று நீக்கியாக செயல்படுகிறது.
  • 25 முதல் 50 கீழை வந்தால் தலை வலி, ஆஸ்துமா மற்றும் செரிமானம் பிரச்சனை எல்லாம் தீர்ந்துவிடும்.
  • இது இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு வலிமை உண்டாக்குகிறது.
  • முட்டைகோஸை அடிக்கடி உணவில் சேர்த்துவந்தால் பித்தம் நீர் அளவு சீரான நிலையில் இருக்கும்.

முட்டைகோஸின் கனமான தண்டுகளை நீக்கிவிட்டு சாபிடுவது நல்லது. இதில் அதிகமான அளவு கால்சியம் மற்றும் இரும்பு சத்துக்களும் உள்ளன. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு இது. சர்க்கரை நோயின் தாக்கத்தை இது கட்டுப்படுதுகிறது. முட்டைக்கோஸ் கொப்தா கரி செய்முறையை பற்றி காணலாம்.

தேவையானவை:

முட்டைக்கோஸ் - 150 கிராம்.
கடலை மாவு - 3 மே.க.
வெங்காயம் - 1.
தக்காளி - 2.
இஞ்சி - 1 இன்ச்.
ஏலக்காய் - 1.
பட்டை சிறிது - 1.
கிராம்பு - துரிவி.
சீரகம் - 1 தே.க.
கொத்தமல்லி - 1 தே.க.
உப்பு தேவையான அளவு.
எண்ணெய் வறுப்பதர்க்கான அளவு.
கொத்தமல்லி இலை.

செய்முறை:
  • வெங்காயம், தக்காளி, இஞ்சி, சீரகம், கொத்தமல்லி, ஏலக்காய், பட்டை, கிராம்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து விழுதாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  • கொத்தமல்லி இலையை நறுக்கி வைதுக்கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் முட்டைக்கோசை நறுக்கி வைத்து, அதனுடன் கடலைமாவு, அதற்க்கு தேவையான அளவு உப்பு மற்றும் குறைவான அளவு தண்ணீர் தெளித்து நன்றாக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்க வேண்டும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் வறுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி உருண்டைகளை பொறித்து எடுக்க வேண்டும்.
  • மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்றாக கிளர வேண்டும்.
  • அதனுடன் சிறிது உப்பு மற்றும் மிகச்சிறிதளவு சர்க்கரை சேர்த்து விழுதின் பச்சை வாசணை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும்.
  • குழம்பிலிருந்து எண்ணெய் தனியே பிரியும் வரை அதை வேகவிடவும்.
  • குழம்பு கெட்டியானால் சிறிதளவு தண்ணீர் சேர்க்க வேண்டும்.
  • குழம்பு வெந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு பொறித்து வைத்துள்ள கொப்தா உருண்டைகளை போடவேண்டும்.
  • நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலையை தூவி பரிமாறலாம்.
  • சூடான முட்டைக்கோஸ் கொப்தா கரி தயார்

No comments:

Post a Comment