காய்கறிகள், கீரை வகைகள் மற்றும் இறைச்சி வகைகள் போன்றவற்றை நீரில் வேகவைப்பத்தின் மூலம் அல்லது வேகவைத்த பொருள்களை சூடான தண்ணீரில் கலப்பதின் மூலம் இதனை தயாரிக்கலாம்.
சூப் என்ற திரவ பானத்தை தெளிவான சூப் மற்றும் அடர்த்தியான சூப் என இருவகையாகப் பிரிக்கலாம். சூப் அடர்த்தியாக இருக்க அரிசி மாவு, சோழ மாவு, முட்டை, வெண்ணெய், பாலாடை போன்றவற்றை சேர்க்கலாம். சத்துக்கள் நிறைந்த சூப்பிற்கு பாலாடை மற்றும் வெண்ணெய் போன்றவற்றை தவிர்க்கலாம்.
காய்கறி சூப்பில் சேர்க்கப்படும் அனைத்து காய்கறிகளின் சத்துக்கள் முழுமையாக அந்த சூப்பில் காணப்படுகிறது. உணவில் அக்கறை இல்லாத சில குழந்தைக்களுக்கு இந்த சத்துக்கள் நிறைந்த சூப் கொடுப்பதால் அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து இதன் மூலம் கிடைக்கப் பெறுகிறது.
ஊடச்சது நிறைந்த சூப்பானது சளி, இருமல் போன்றவற்றை போக்குகிறது. எலும்புகள் வலுவாக இருக்க உதவுகிறது.
தேவையானவை:
மக்காசோளம் - 1/2 கப்.
முட்டைக்கோஸ்(அரிந்தது) - 1/2 கப்.
காரட்(அரிந்தது) - 1/2 கப்.
பால் சிறிதளவு.
உப்பு தேவையான அளவு.
மிளகு பொடி தாவையான அளவு.
செய்முறை:
- முதலில் மக்காசோளம், முட்டைகோஸ், காரட் ஆகியவைகளை தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.
- வேகவைத்த காய்களில் இரண்டு மேஜைக்கரண்டி அளவு மக்காசோளம் மட்டும் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- மீதம் உள்ள வேகவைத்த அனைத்து காய்கறிகளையும் நன்றாக ஆறியவுடன் மிக்ஸ்-இல் அரைக்கவும்.
- அதனை வடிகட்டி எடுத்த ஜூஸ் வுடன் தனியே எடுத்து வைத்துள்ள மக்காசோள பற்களையும் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
- கொதித்ததும் கொஞ்சம் பால் மற்றும் சிறிது உப்பு சேர்த்து கலக்கவும்.
- அதனுடன் சிறிது மிளகு பொடி சேர்த்து அடுப்பை அணைக்க வேண்டும்.
- சூடான மக்காசோள சூப் தயார்.